About Us
Empowering Futures Since 2006
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இயங்கி வரும் நமது Raja Vocational Training Centre கடந்த 2006ம் ஆண்டு முதல் ஓய்வு பெற்ற சேர்மன் இன்னாசி முத்து, ஆசிரியை தெரேஸ் அவர்களால் தொடங்கபட்டு உயர்திர சேர்மன் கிறிஸ்டோபர் சேவியர் அவர்களால் இன்று வரை சிறப்பாக செயல்படுத்துப்பட்டு வருகிறது. கடந்த 19 வருடங்களாக நமது நிறுவனத்தில் மருத்துவத் தொழிலுநுட்ப பயிற்சி வழங்கி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
நமது நிறுவனத்தில் காற்றோட்டமான வசதி கொண்ட வகுப்பறைகள், உயர்தர வசதி கொண்ட மருத்துவமனைகளில் செய்முறை பயிற்சி. மாணவியர்களுக்கு தனி விடுதி வசதி, தரமான நர்சிங் செய்முறை பயிற்சி கூடம், லேப் ஆய்வுக்கூடம், குளிர் ஊட்டபட்ட மினி ஆடிட்டோரியம் மற்றும் காணொளி காட்சிக்கூடம் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் உள்ளன.
ராஜா ஸ்டுடென்ட்ஸ் அறக்கட்டளை மூலம் அரசு மருத்துவமனணயுடன் இணைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுக்கா, ராஜபாளையம் தாலுக்கா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ முகாம், ரத்ததான முகாம் மற்றும் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறது. இது மட்டுமின்றி ஏழை எளிய மக்களுக்கு வருடா வருடம் பலவேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறது.
நமது நிறுவனத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு திறமையான மாணவிகளை உருவாக்கி, உயர்தர வசதிகள் கொண்ட மருத்துவமணைகளான திருவனந்தபரம் ஸ்ரீகோகுலம் மருத்துவ கல்லூரி மருத்துவமணை, சென்னை மாதா மருத்துவக்கல்லூரி மருத்துவமணை மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமணைகளில் செய்முறை பயிற்சிகள் ஆண்டு தோறும் வழங்கபட்டு வருகிறது.
நமது நிறுவனத்தில் படித்து முடித்த மாணவிகளுக்கு அரசு மருத்துவமனைகளிலும் (Out Sourcing Job), தனியார் மருத்துவமனைகளிலும், வெளிநாட்கள் உள்ள மருத்துவமணைகளிலும் 100% வேலை வாய்ப்பை நமது நிறுவனம் உறுதிப்படுத்தி தருகிறது. நமது நிறுவனத்திற்கு ஒவ்வொரு வருடமும் Best-Archiver Award மற்றும் Best-Motivator Award வழங்கபடுகிறது.
மாணவிகளின் தனித்திறனை மேம்படுத்த Sports, Seminar, Quiz, Cultural Programme, மத்திய அரசின் கீழ் இயங்கும் Scout Progaramme ஆகிய நிகழ்ச்சிகளையும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் மாணவிகளை ஊக்கிவிக்கும் விதமாக இலவச Spoken English, இலவச சீருடை, இலவச மெடிக்கல் கோட், இலவச மருத்துவ உபகரணங்கள், மாணவிகளின் உடலநலத்தை கருத்தில் கொண்டு இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளிட்டவைகளையும் ராஜா ஸ்டுடென்ட்ஸ் அறக்கட்டளை சார்பில் வழங்கபட்டு வருகிறது என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறோம்.